Ingredients
- ½ கிலோ மட்டன்
- 150g சின்ன வெங்காயம்
- இஞ்சி பாதி விரல் அளவு
- 6 கிராம்பு
- 4 ஏலக்காய்
- 2 கல்பாசி
- 4 மிளகாய் வத்தல்
- 4 தேக்கரண்டி கொத்தமல்லி
- 2 தேக்கரண்டி சீரகம்
- 1 தேக்கரண்டி மிளகு
- 4 தேக்கரண்டி கசகசா
- 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
- 4 தேக்கரண்டி தேங்காய் பூ
- எண்ணெய் தேவையான அளவு
- 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
Preparation Method For Mutton Kulambu
- கடாயில் தேவையான அளவு எண்ணெய் தடவி கொத்தமல்லியை பொன்னிறமாக வறுக்கவும் இதனுடன் 2 தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி மிளகு சேர்த்து வறுக்கவும் அதன் பிறகு 4 தேக்கரண்டி கசகசாவை சேர்த்தவுடனே கடாயை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.
- சின்ன வெங்காயத்தை 150g உரித்து வெட்டி வைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி 6 கிராம்பு, 4 ஏலக்காய், 2 கல்பாசி போட்டு வெட்டி வைத்த வெங்காயம் மிளகாய் வத்தல் போட்டு தாளிக்கவும்.
- இதனுடன் கழுவிய மட்டன் சேர்த்து உப்பு, இஞ்சி சேர்த்து வேக வைக்கவும்.
- வறுத்து வைத்துள்ள மசாலாவை மிக்ஸியில் நைசாக பொடி அரைத்து மட்டனுடன் கலந்துகொள்ளவும்.
- மேலும் இதனுடன் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் சேர்த்து 4 தேக்கரண்டி தேங்காய் பூ சேர்த்து குழம்பு கெட்டியாகவோ தண்ணியாகவோ அவரவர் விருப்பத்திற்கேற்ப தண்ணீர் கலந்து குக்கரை மூடி போட்டு வேக வைத்து இறக்கவும்.
- இப்போது சுவையான மட்டன் குழம்பு ரெடி.