Customer Recipe

Paruppu Usili Idli

paruppu usili idli
  • Prep Time10 min
  • Cook Time30 min
  • Total Time40 min
  • Serving Size2

    Ingredients

      • வேக வைத்த இட்லி – 4
    • அரைக்க:
      • துவரம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
      • பாசிப்பருப்பு –  1 டேபிள் ஸ்பூன்
      • பச்சை மிளகாய் – 2
      • இஞ்சி – சிறு துண்டு
      • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
      • உப்பு – தேவையானது
      • பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
    • தாளிக்க:
      • கடுகு, உளுத்தம்பருப்பு – தலா 1 டீஸ்பூன்
      • கறிவேப்பிலை – சிறிது
      • எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

    Preparation Method:

    1
    1. முதலில் பருப்பு வகைகளைத் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.
    2. பிறகு தண்ணீரை வடித்து விட்டு, பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து அரைக்கவும்.
    3. அரைத்த விழுதை இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் 10 நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும்.
    4. ஆறியதும் உதிர்த்து வைக்கவும்.
    5. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும்.
    6. சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு போடவும்.
    7. வெடித்தவுடன் கறிவேப்பிலை போடவும்.பொரிந்தவுடன் உதிர்த்து வைத்துள்ள பருப்புக் கலவையைப் போட்டுக் கிளறவும்.
    8. 5 நிமிடங்கள் கிளறிய பிறகு, வேக வைத்த இட்லியைத் துண்டுகளாகப் போடவும்.
    9. 2 நிமிடங்கள் கிளறினால் எல்லாம் சேர்ந்து விடும். இப்போது பருப்பு உசிலி இட்லி ரெடி!

    Now tasty Paruppu Usili Idli is ready to serve.