- Cook Time15 min
- YieldServes 10
Ingredients:
- பச்சரிசி -ஒரு கப்
- புழுங்கல் அரிசி -கால் கப்
- அவல் -கால் கப்
- வெந்தயம்- ஒரு டீஸ்பூன்
- முழு உளுந்து – 3 டேபிள்ஸ்பூன்
- நாவல் பழக்கூழ் – ஒரு கப்
- டூட்டி ஃப்ரூட்டி- கால் கப்
- தேங்காய் துருவல்- கால் கப்
- வெல்லம் அல்லது கருப்பட்டி பொடித்தது ஒரு கப்
- ஏலக்காய் பொடி -ஒரு டீஸ்பூன்
- நெய்
Preparation Method:
1
அவலை நன்றாக தண்ணீரில் அலசி பத்து நிமிடங்கள் நீரில் ஊற வைக்கவும்.
2
அரிசி , உளுந்து ,வெந்தயத்தை சுமார் மூன்று மணி நேரம் ஊற வைத்து கிரைண்டர் அல்லது மிக்ஸியில் ஊறின அவலுடன் சேர்த்து அரைக்கவும்
3
அரைத்து மாவை அப்படியே 5, 6 மணி நேரம் மூடி வைக்கவும்
4
பிறகு அந்த மாவுடன் தேங்காய் துருவல் ,ஏலக்காய் பொடி ,வெல்லம் பொடித்தது, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து, நாவல் பழக்கூழ் கலந்து இதய வடிவ இட்லித் தட்டில் அல்லது சிலிக்கான் மோல்டில் நெய் தடவி மாவை ஊற்றி பத்து நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்
5
இப்போது அழகான சுவையான சத்தான நாவல் பழ இட்லி தயார். நாவல் பழம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது
Now tasty Naaval pazha idli is ready to serve.