Customer Recipe

பருப்பு உசிலி இட்லி

  • Cook Time1 hr 20 min
  • YieldServes 2

    Ingredients:

    • வேக வைத்த இட்லி – 4
    • அரைக்க:
      • துவரம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
      •  
      • பாசிப்பருப்பு –  1 டேபிள் ஸ்பூன்
      •  
      • பச்சை மிளகாய் – 2
      •  
      • இஞ்சி – சிறு துண்டு
      •  
      • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
      •  
      • உப்பு – தேவையானது
      •  
      • பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
      •  
    • தாளிக்க:
      • கடுகு, உளுத்தம்பருப்பு – தலா 1 டீஸ்பூன்
      •  
      • கறிவேப்பிலை – சிறிது
      •  
      • எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

    Preparation Method:

    1
    • முதலில் பருப்பு வகைகளைத் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.
    2
    • பிறகு தண்ணீரை வடித்து விட்டு, பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து அரைக்கவும்.
    3
    • அரைத்த விழுதை இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் 10 நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும்.
    4
    • ஆறியதும் உதிர்த்து வைக்கவும்.
    5
    • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும்.

     

    6
    • சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு போடவும்.
    7
    • வெடித்தவுடன் கறிவேப்பிலை போடவும்.பொரிந்தவுடன் உதிர்த்து வைத்துள்ள பருப்புக் கலவையைப் போட்டுக் கிளறவும்.
    8
    • 5 நிமிடங்கள் கிளறிய பிறகு, வேக வைத்த இட்லியைத் துண்டுகளாகப் போடவும்.
    9
    • 2 நிமிடங்கள் கிளறினால் எல்லாம் சேர்ந்து விடும்.இப்போது பருப்பு உசிலி இட்லி ரெடி!

     

    Now tasty Paruppu Usili Idli is ready to serve.