Customer Recipe

வெஜிடபிள் மசாலா இட்லி

  • Cook Time1 hr
  • YieldServes 2

    Ingredients:

    • வெந்த இட்லி – 4 (துண்டுகள் ஆக்கி வைக்கவும்)
    • பீன்ஸ் – 5 (பொடியாக நறுக்கி வைக்கவும்)
    • கேரட் -1( துருவி வைக்கவும்)
    • தக்காளி – 2 ( பொடியாக நறுக்கி வைக்கவும்)
    • முட்டைக்கோஸ் – சிறிது (துருவி வைக்கவும்)
    • பெரிய வெங்காயம் – 1(பொடியாக நறுக்கி வைக்கவும்)
    • பூண்டுப் பற்கள் – 10 (பொடியாக நறுக்கி வைக்கவும்)
    • பச்சை மிளகாய் – 2 ( வாய் கீறி வைக்கவும்)
    • புதினா இலைகள் – சிறிது
    • பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை – தலா 2
    • கரம் மசாலா – 1 டீஸ்பூன்
    • சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்
    • எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
    • உப்பு – தேவையானத
    • மல்லித்தழை – அலங்கரிக்க

    Preparation Method:

    1

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும்.

    2

    சூடானவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போடவும்.

    3

    பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும்.

    4

    இஞ்சி துருவல், பூண்டுப் பற்கள் போட்டு வதக்கவும்.

    5

    2 நிமிடம் வதக்கி, பிறகு தக்காளித் துண்டுகள், சிட்டிகை உப்பு போட்டு வதக்கவும்.

    6

    நன்கு வதங்கிய பிறகு, பொடியாக நறுக்கிய பீன்ஸ், துருவிய கேரட், முட்டைக்கோஸ் போட்டு வதக்கவும்.

    7

    வாய் கீறிய பச்சை மிளகாயைப் போடவும்.

    8

    கரம் மசாலா, சாம்பார் பொடியைப் போட்டுக் கிளறி, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வேக விடவும்.

    9

    வெந்து சேர்ந்தார் போல வந்தவுடன் இட்லித் துண்டுகளைப் போட்டுக் கிளறி விடவும்.

    10

    மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.இப்போது வெஜிடபிள் மசாலா இட்லி ரெடி.

     

    Now tasty   Vegetable Masala Idli is ready to serve.